என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உளவுத்துறை எச்சரிக்கை"
சமீபத்தில் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதி திடீரென தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
‘இதுதொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. சில தகவல்களும் அளிக்கப்பட்டிருந்தது. நாங்கள் மிக, மிக வருந்துகிறோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் அமைப்புகளுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியுள்ளது.
இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீண்டும் கட்டித் தரப்படும்’ என இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும் அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரியுமான ரஜித சேனரத்னே தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக இலங்கை அரசு நேற்று அறிவித்திருந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்குக்கு என தனியாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். #SriLankablasts #SriLankaapologises #intelligencetipoff #Easterblasts
புதுடெல்லி:
நாட்டின் 72-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.
இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளில் டெல்லி போலீசாருடன், பாதுகாப்பு படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். டெல்லி முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பயங்கரவாதிகள் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகிறார்கள்.
இதற்கிடையே 2 பயங்கரவாதிகள் நாசவேலை சதித் திட்டத்துடன் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் பல நாச வேலைகளில் ஈடுபட்டது. இதன் தலைவனான மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரப் அக்சார் என்பவனிடம் டெல்லியில் நாசவேலை நடத்தும் சதித் திட்டம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக இப்ராகிம், முகமத் உமர் என்ற 2 பயங்கரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். இப்ராகிம் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தான். தற்போது அவன் டெல்லியை அடைந்து விட்டதாக தெரியவந்துள்ளது.
இதேபோல் முகமத் உமரும் சமீபத்தில் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து விட்டதாகவும் அவன் டெல்லி வந்து இப்ராகிம் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து விட்டதாகவும் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இங்கு இருவரும் ரகசிய இடத்தில் தங்கி தங்களது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகளும் டெல்லிக்குள் புகுந்து இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நாசவேலைகளில் ஈடுபடும் சதித்திட்டம் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் அப்துல் அக்சார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2 பயங்கரவாதிகளும் மனித வெடி குண்டாக செயல்படக் கூடியவர்கள் என்றும், சாதுக்கள் வேடத்தில் நுழைந்து பாதுகாப்பு படையினரின் முகாம்களில் தாக்குதல் நடத்தவும், சுதந்திர தின விழாவில் நாசவேலையில் ஈடுபடவும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் சோதனை நடத்தி ரகசிய இடத்தில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினரும், பயங்கரவாத எதிர்ப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி அதன்மூலம் அங்கு தங்கள் ஆதரவாளர்களிடம் நல்ல பெயர் எடுப்பதில் முனைப்பு காட்டுகின்றன. சமீபகாலமாக ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் பல ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
தற்போது காஷ்மீருக்கு வெளியே தலைநகர் டெல்லியில் அவர்கள் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
பயங்கரவாதிகளின் நாசவேலைக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தேவையான பயிற்சிகளை அளிப்பதுடன் ஆயுத உதவிகளையும் செய்து வருகிறது.
தற்போது புதுவகையான வெடிகுண்டுகள் தயாரிப்பு பணியிலும், அவற்றை வெடிக்கச் செய்யும் முறைகள் பற்றியும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Independenceday
லக்னோ:
இந்தியாவில் முக்கிய தலைவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு உளவுத்துறையினர் கண்டுபிடித்து எச்சரித்தனர்.
ஆனால் பயங்கரவாதிகள் எந்தெந்த தலைவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளனர் என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதை சமீபத்தில் மத்திய பிரதேச மாநில போலீசார் கண்டுபிடித்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் சிக்கிய ஒரு நபர் மூலம் இது தெரிய வந்துள்ளது.
வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று லக்னோவில் நடக்கும் விழாவில் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் கொடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். அந்த சமயத்தில் அவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநில போலீசார், இந்த தகவலை உத்தரபிரதேச மாநில போலீசாருக்கு தெரிவித்து உஷார்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு உடனடியாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று யோகி ஆதித்யநாத் தேசியக் கொடி ஏற்ற வரும்போது அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரை குண்டு துள்ளக்காத காரில் விழாவுக்கு அழைத்து வர பாதுகாப்பு படையினர் ஏற்பாடு செய்துள்ளனர். #YogiAdityanath
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.
பல சமயங்களில் பயங்கரவாதிகளின் சதியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய 3 நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகள் முகாமிட்டு உள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
ஆயுதப் சப்ளை, பயிற்சி உள்பட பல்வேறு உதவிகளை இந்த பயங்கரவாத அமைப்புக்கு ஐ.எஸ்.ஐ. செய்து வருகிறது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய நகரங்கள் இலக்காக இருக்கிறது.
இந்த அமைப்பின் பயங்கரவாதிகள் சிலர் எல்லை கோட்டு வழியாக காஷ்மீருக்குள் நுழைந்து இருக்கலாம் என்று உளவுத்துறை மத்திய அரசிடம் கொடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித வெடிகுண்டுகளாக சில இளைஞர்கள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் புகழை கெடுக்கும் வகையில் பல்வேறு மோசமான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது.
உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டு இருப்பது தெரிய வந்தது.
இதற்காக அந்த அமைப்பின் 12 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி இருப்பதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த 12 பயங்கரவாதிகளும் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள்.
காஷ்மீரில் நாளை (சனிக்கிழமை) 2 இடங்களில் மிகப்பெரிய தாக்குதலுக்கு அந்த 12 பயங்கரவாதிகளும் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் அவர்கள் கைவரிசை காட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஒருவேளை நாளை தாக்குதல் நடத்த முடியாவிட்டால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்குள் தங்களது திட்டத்தை நிறைவேற்ற
பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி உளவுத் துறை அமைப்பினர் மத்திய அரசுக்கும், காஷ்மீர் மாநில அரசுக்கும் தகவல் தெரிவித்து எச்சரித்துள்ளனர்.
நாளை ரம்ஜான் நோன் பின் 17-வது நாளாகும். கடந்த ஆண்டு இதே தினத்தன்று காஷ்மீரில் பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதலை நடத்தினார்கள். அதே போன்றும் இந்த ஆண்டும் தாக்குதலுக்கு அவர்கள் குறி வைத்துள்ளனர்.
இந்த திட்டத்திற்காக கடந்த புதன்கிழமை 12 பயங்கரவாதிகளும் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அந்த அமைப்பின் 8 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காஷ்மீரில் பதுங்கி இருக்கிறார்கள் என்று ஏற்கனவே உளவுத்துறை கூறி உள்ளது. இந்த 20 பயங்கரவாதிகளும் சேர்ந்து தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கிய அரசு அலுவலகங்களில் துப்பாக்கியுடன் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர துணைநிலை ராணுவத்தினர் கண்காணிப்பு பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்